TamilLeader

90 சீட் ஜெயிப்போம்….? மிச்ச எம்.எல்.ஏ.வுக்கு பா.ஜ.க. கியாரண்டி! -அமைச்சர்களை உற்சாகப்படுத்துகிறார் எடப்பாடி




 

    ‘’எப்படியும் நாம தான் ஆட்சிய பிடிக்கப்போகிறோம். நீங்க அந்தத்துறைக்கு மூணாவது முறையா அமைச்சராகப் போறீங்க” என்று தன்னை சந்திக்க வரும் அமைச்சர்களுக்கு உற்சாகமூட்டி, பணிகளை வேகப்படுத்துகிறார் முதல்வர் எடப்பாடி.

 

     ‘’ஏண்ணே…. எப்படிண்ணே… நாம ஜெயிக்க முடியும்..?” என்று சில அமைச்சர்கள் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டும் விட்டார்கள்.

 

    ‘’அட… விடுங்கப்பா… வட மாவட்டத்துல 45, கொங்குல 40 இருக்கு. இந்த 85-ல ஒரு 50 ஜெயிச்சிப்புடுவோம். அப்புறமா, சென்னையில 16…. இதுல ஒரு எட்டு வைச்சுக்குங்க. அப்படியே தெற்கே ஒரு 20 ஜெயிச்சி தரமாட்டாரா நம்ம ஓ.பி.எஸ். அதையும் சேர்த்தா 78 ஆச்சா… அப்புறமா… டெல்டாவுல ஒரு பத்து, பதினைஞ்சி ஜெயிக்க மாட்டாமா…? கூட்டி கழிச்சி பார்த்தா 90 வந்துடுவோம்…. சொல்ல முடியாது…. இதுல 120 கூட வர வாய்ப்பு இருக்குன்னு நம்ம சுனில் டீம் சொல்லுது….” என்று அவர் சொல்லும் போது, பாகுபலி பட கிராபிக்ஸ் காட்சிகள் கண் முன்னே விரிகிறதாம் அமைச்சர்களுக்கு.

       ‘’அண்ணே…. 90 வந்தா…?” என்று அமைச்சர் ஒருவர் வினவ…

 

     ‘’ மிச்சத்துக்கு எங்கே போவோம்ன்னு தானே கேட்கறீங்க… அதை பா.ஜ.க. பார்த்துக்கும்’’ என்று அடித்து விடுகிறார் எடப்பாடி.

 

 

     சில அமைச்சர்கள், ‘’இவரு நம்மை ஏமாத்துறாரா… இல்லை, இவரை அந்த சுனிலு ஏமாத்துறாரான்னு தெரியல… பாப்போம்… பாப்போம்’’ என்று முணு முணுத்தபடியே செல்கிறார்களாம்.

 

      அ.தி.மு.க. கூட்டணியில இருந்து

தே.மு.தி.க. கழன்று அ.ம.மு.க.வுடன் நிற்கிறது.

 

கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கூட்டணியில் இல்லை. தனித்து போட்டியாம்…

 

சரத்குமார், தமிமுன் அன்சாரி, கருணாஸ், ஏ.சி.சண்முகம், தனியரசு போன்ற ஒரு……  % ? கட்சிகளும் காலை வாரி இருக்கிறது.

அ.ம.மு.க.வுடன் தே.மு.தி.க.வும் சேர்ந்தால் பல இடங்களில் அ.தி.மு.க.வுக்கு பலத்த சேதம் விழும்.

என்ன நம்பிக்கையில் எடப்பாடியார் இப்படி கணக்குப் போடுகிறார் என்று அமைச்சர்களுக்கே புரியவில்லை.

 

     கடந்த மக்களவைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு கிடைத்த வாக்கு சதவீதம்  52.64%

 

      அ.தி.மு.க.வுக்கு கிடைத்த சதவீதம் 30.28 %

 

     கிட்டத்தட்ட எப்படி பார்த்தாலும் 23 %  அதிகம் தி.மு.க.வுக்கு .

 

     இதில் தே.மு.தி.க., உள்ளிட்ட சில கட்சிகள் போனாலும் போகட்டும் என்றே கொள்வோம். அதை கழித்துக்கொண்டால், அ.தி.மு.க.வுக்கு 25% என்று கணக்கில் கொள்வோம். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு 5-7 % கூடினாலும் 32 % தான் வருகிறது

 

     ஆனால், தி.மு.க. கூட்டணிக்கு இன்னும் 53 % -லிருந்து குறைந்தாலும் 46 % இருக்கிறது.

 

    2016 சட்டமன்றத் தேர்தலில் 2 % வித்தியாசத்திலே அ.தி.மு.க. கூட்டணிக்கு 135 இடங்களும், தி.மு.க. கூட்டணிக்கு 98 இடங்களும் கிடைத்தன.

 

     அப்படியென்றால், 46 % லிருந்து 32 % கழித்தால்,  14 % வருகிறது.

இந்த 14 % வித்தியாசம் எங்கே போய் முடியும்!?

 

  • தமிழ் ஒற்றன் -
English Summary

We won 90 Seats ?! - Says Edapadi Palanisamy

TamilLeader