TamilLeader

பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் மாமனாரை மிரட்டிய ஜெகஜால கில்லாடி எஸ்.பி. !




தமிழ்நாட்டின் காவல்துறை சந்திக்க களங்கம் இல்லை. ஆனால், சிறப்பு டி.ஜி.பி. என்ற பெயரில் சில மாதங்களே இருந்த ராஜேஷ் தாஸ் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஏன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார் என்பது எல்லாருக்கும் தெரியும்.

 

இது போன்ற பாலியல் புகாரில் சிக்குபவர்கள், அப்புகாரில் இருந்து தப்பிக்க  ஆளும் அரசின் பின்னால் இருந்து தப்பித்துக்கொள்வார்கள்.

இதுவரை அப்படித்தான் நடந்திருக்கிறது. ஆனால், பெண் அதிகாரியிடம் அத்து மீறிய ராஜேஷ் தாஸ் மட்டுமே, அந்த பெண் அதிகாரியை சக அதிகாரிகளை வைத்து மிரட்டச் செய்திருக்கிறார்.

 

மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராம், அறிவுரை என்ற பெயரில் மிரட்டி இருக்கிறார்.

 

அடுத்து, செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் செய்த தகிடுத்தத்தம் தான் அதிகார போதையின் உச்சம். பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி., சென்னைக்கு சென்று டி.ஜி.பி.யை சந்தித்து புகார் கொடுக்கப்போகிறார் என்று தெரிந்ததும், உளுந்தூர்பேட்டையில் ஓய்வு விடுதியில் தங்கி இருக்கும் ராஜேஷ் தாஸ், எஸ்.பி. கண்ணனை ஏவி விடுகிறார்.

அந்த கண்ணன், தான் ஒரு புர்மோட்டிவ் அதிகாரி (டி.எஸ்.பி.யிலிருந்து எஸ்.பி.யானவர்) என்பதையும் மறந்து, நேரடி எஸ்.பி.யாக இருக்கும் பெண் அதிகாரியை செங்கல்பட்டு  சுங்கச்சாவடி வழியாக வந்துக்கொண்டிருந்த பெண் அதிகாரியின் காரை, அதிரடிப்படை போலீசாரை வைத்து மறிக்கிறார்.

மேற்கொண்டு கார் எடுக்காத படி, தனது போலீசாரை வைத்து பெண் அதிகாரி பயணித்த காரின் சாவியை அந்த டிரைவரிடம் இருந்து பறிக்க உத்தரவிடுகிறார். மேற்கொண்டு சென்னை போகக்கூடாது என்று ஒரு ஐ.பி.எஸ். அதிகாரிக்கே ஐ.பி.எஸ். வாங்காத கண்ணன் மிரட்டுகிறார்.

 

இதனால் தான்…. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி சி.பி.சி.ஐ.டிக்கு கொடுத்த புகாரில்

ஏ-1--------- முதல் குற்றவாளியாக ராஜேஷ் தாஸ்

ஏ-2----------2வது குற்றவாளியாக கண்ணன்

ஆகியோரை சேர்த்து இருக்கிறார்.

 

அதே புகாரில், இன்னொரு தொலைபேசி எண்ணையும் கொடுத்து …. ’’அந்த எண்ணில் இருந்து பேசிய நபர், என் மாமனாருக்கு போன் செய்து, இப்புகாரை வாபஸ் வாங்கவில்லை என்றால் விளைவுகள் விபரீதமாகும்’’ என்று மிரட்டி இருக்கிறார்.

இதுவரை தமிழ்நாட்டில், இப்படி ஒரு பாலியல் புகாரில் சிக்கிய நபருக்காக, இன்னொரு நபர் மிரட்டிய சரித்திரமே இல்லை.

அப்படி மிரட்டிய நபர்….?

அந்த அலைபேசி யாருக்கு சொந்தமானது என விசாரித்தால்…..

எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ள 9442267101 என்ற எண் மேற்கு மண்டல மதுவிலக்கு எஸ்.பி. குணசேகரனுக்கு சொந்தமானது. இவர் 1987-ம் ஆண்டு பேட்ச் எஸ்.ஐ.யாக பணியில் சேர்ந்தது முதல் இதுவரை சிக்காத பிரச்னை இல்லை. குறிப்பாக வேலை பார்த்த இடங்களில் எல்லாம் பாலியில் பிரச்னையில் சிக்கி பல்வேறு தண்டனைகளையும் பணி மாற்றத்தையும் சந்தித்தவர்.

சென்னை , கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை என எல்லா இடத்திலும் மன்மத பிரச்னை செய்தவர் .

ஈரோடு மாவட்ட கூடுதல் அதிகாரியாக பணியாற்றிய போது முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி.,யான சத்தியமூர்த்திக்கு தேவையானதை செய்து நெருக்கமானார். அதன் மூலம் பதவி உயர்வில் கோவை துணை ஆணையர் மற்றும் தற்போது பத்து மாவட்டங்களை கண்காணிக்கும் பசையான மதுவிலக்கு பணியிடம் பெற்றுள்ளார்.

 

பெண்  அதிகாரியின் மாமனாரை மிரட்டிய வழக்கில் இவரை குற்றவாளியாக சேர்க்கக் கூடாது என முன்னாள் உளவு அதிகாரி சிபிசிஐடி அதிகாரிகளுக்கு, அந்த சத்தியமூர்த்தியே உத்தரவு போட்டிருக்கிறார்.

என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு காவல்துறை.

 

 

- தமிழ் ஒற்றன்

English Summary

SP threaten

TamilLeader