TamilLeader

செந்தில் பாலாஜியின் பேராசை…! ரூ.100 கோடி செலவு செய்கிறாரா?




    மாறாத பேராசை கொண்டு ஈடேறாத திட்டங்களை அறிவித்து அதிரிபுதிரி சித்து விளையாட்டு விளையாடுவதில் செந்தில் பாலாஜிக்கு இணை யாருமிருக்கவே முடியாது.

 

     எந்த ஆட்சி வந்தாலும், அதிகாரத்தில் தன் பிடி இருந்தாகவே வேண்டும் என்பதே அவர் அவா.  தனது அவாவுக்கு தலையை ஆட்ட வைக்கும் அளவுக்கு தலைமையை குவா குவா குழந்தையாகிவிடுவார். காரணம், அவரது முறவாசல் கவனிப்பு அப்படி.

  

     அப்படித்தான், இந்த முறையும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினே, செந்தில் பாலாஜி பேச்சை கேட்டு நடந்துக்கொண்டிருக்கிறார். அதைத்தான், தி.மு.க.விலிருந்து விலகிச் சென்ற மாஜி அமைச்சர் சின்னசாமி சொல்லிவிட்டுப் போனார்.

 

     ‘’ஸ்டாலின் சொந்தமாக முடிவெடுக்கமாட்டார்” என்று சின்னசாமி சொன்னதன் பின்னணி என்ன என்று விசாரித்தால், அப்படித்தான் கரூர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது என்று தி.மு.க.வினரே தெரிவிக்கின்றனர்.

 

     கரூர் மாவட்டத்திற்குள் இருக்கும் கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் (தனி) ஆகிய நான்கு தொகுதிகளும் நான் சொல்லும் வேட்பாளர்களையே அறிவித்தால், அச்செலவுகளை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் சொல்லிவிட்டார் செ.பாலாஜி.

    

     அதனால் தான், இந்த முறை அரவக்குறிச்சி தொகுதி தனக்கு கிடைக்கும் என்று நம்பி இருந்த சின்னசாமிக்கு அத்தொகுதி கிடைக்கவில்லை.

 

     கரூர் மாவட்ட 4 தொகுதிகளிலும் செ.பாலாஜியைத் தவிர வேறு பிரபலங்கள் இல்லை. தி.மு.க. ஆட்சி அமைக்கும் சூழலில், அம்மாவட்ட அமைச்சராக இவர் தான் வருவார். அதை நம்பியே, 100 கோடிக்கு மேல் கடன் வாங்கி, பேராசையில் செலவு செய்து வருகிறார் என்று தி.மு.க.வினரே குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

      இதன் காரணமாகவே, கரூரில் அவரை குறி வைத்து, வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

       அச்சோதனையில் என்ன கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் செ.பாலாஜியின் பேராசை விளையாட்டு மட்டுப்படப்போவதில்லை.

 

    அவரது பேராசை ஒரு பக்கம் இருக்கட்டும். இத்தனை கோடிகள் வாரி இறைத்துவிட்டு, பதவியை பிடித்தால்…

     செ.பாலாஜியின் செயல்பாடு எப்படி இருக்கும்?

      நான்கே மாதங்களில் தி.மு.க.வின் ஆட்சிக்கு ஆணி அடித்து சூனியம் செய்துவிடுவார் போலி இருக்கிறது…!

      என்ன நடக்கப்போகிறதோ?

 

- தமிழ் ஒற்றன் -

English Summary

Senthil Balaji Spending 100 Crores?

TamilLeader