TamilLeader

கவர்னர் கனவில் மாஜி ஐ.ஜி…? - ஜோதிடரைச் சுற்றினால் நடக்குமா?
கவர்னர் கனவில்

மாஜி ஐ.ஜி…?

  • ஜோதிடரைச் சுற்றினால் நடக்குமா?

 

    ’’தேர்தல் முடியும் முன்பே இவருக்கு கவர்னர் பதவி கிடைக்குமா…?

      தேர்தல் முடிந்த பிறகு, இவர் விரும்பிய ஆட்சி அமைந்ததுமே இவருக்கு கவர்னர் பதவி கிடைக்குமா…? எம்.ஜி.ஆர். வாங்க…. சரோஜா தேவியும் வாங்க என்று கட்டளையிடுகிறார் அந்த பட்டு ஜரிகை வேட்டிக்கட்டிய பைவ் ஸ்டார் ஓட்டல் ஜோதிடர்.

முதலில் எலி வருகிறது. அதன் பெயர் எம்.ஜி.ஆராம்.

அடுக்கி வைத்த அட்டைகளை எல்லாவற்றையும் தள்ளிவிட்டு, எதையும் எடுக்காமல் கூண்டுக்குள் ஓட முயற்சிக்க, அதற்கு வருத்த பாதம் பருப்பு காட்டுகிறார். உடனே, அட்டைகள் அடுக்கி வைக்க, ஏழெட்டு அட்டைகளை தள்ளிவிட்டு ஒரு அட்டையை ஜோதிடரிடம் கொடுக்கிறது. எலிக்கு பாதம் கொடுத்து கூண்டுக்குள் அனுப்பி வைக்கிறார் ஜோதிடர்.

 

(அந்த எலி ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்ததாம். ஆனால், ஜோதிடர் அதனுடன் தமிழில் பேசியதை கண்டு ஜோதிடம் கேட்கச் சென்ற வி.ஐ.பி.க்கு புல்லரித்துப் போனதாம்)

 

அடுத்து கிளி வருகிறது. அதன் பெயர் சரோஜாதேவியாம்.

 

கிளியும் தன் பங்கிற்கு சீட்டுக்களை கலைத்துப்போட்டுவிட்டு, ஏதோ ஒரு சீட்டை கொடுத்துவிட்டு, சமர்த்தாய் கூண்டுக்குள் சென்றது.

 

இரண்டு சீட்டையும் ஒன்றாக பிரித்து, கணிப்பது பைவ் ஸ்டார் ஜோதிடரின் ஸ்டைலாம்.

 

இரண்டு அட்டையிலும் என்ன உருவம் வந்தது என்று நமது சோர்ஸ் சொல்ல மறுத்துவிட்டார். ஆனால், ஜோதிடர் சொன்னதை மட்டும் லேசுபாசாக சொன்னார்.

 

‘’நீங்க ஆசைப்படற கவர்னர் உத்தியோகத்துல ஏகச்சிக்கல். வரமாதிரி தெரியும். ஆனா வராது. உங்க ராசி ஏக விசேஷம். ஆனா, உங்க கூட்டாளிங்களுக்கு ராசி சரியில்ல” என்கிறார் ஜோதிடர்.

 

‘’இல்லை சாமியாரே…!”

 

‘’நோ… நோ… நான் சாமியார் இல்லை. ஆஸ்ட்ராலஜர். 3 கண்ட்ரில ஆஸ்ட்ரோ சயின்ஸ் டிகிரி வாங்கியிருக்கேன். என்னோட ஹேர் ஸ்டைல், டிரஸை வைச்சி அப்படி கூப்பிடாதீங்க’’

 

‘’சரிங்க சார்…. எனக்கு அந்த யோகம் இருக்கறதா இளம்பிள்ளை ஜோதிடர் ஒருவர் சொன்னாரே…?’’

 

‘’அப்படி சொல்லியிருந்தால், அவனுக்கு இளம்பிள்ளைவாதம் வந்திருக்கும். என் முடிவு இதுதான்’’ என்று சொன்னதும், வி.ஐ.பி. தொங்கிய முகத்தோடு வெளியேறினாராம்.

 

அந்த வி.ஐ.பி. யாருன்னு சொல்லலையா…?

 

வேறு யாருமில்லை. அ.தி.மு.க. ஆட்சியில உளவுத்துறையில் கோலோச்சிய கே.என்.சத்தியமூர்த்தியே தான்.

 

’’அ.தி.மு.க. ஆட்சியை எப்படியும் கொண்டு வந்துவிடுங்கள். உங்களுக்கு நல்ல பதவி கிடைக்கும்’’ என்று ஆட்சியாளர்கள் கொடுத்த உறுதிமொழிக்காக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராஜேஷ் தாஸூடன் சேர்ந்து, ’மணி –ஹேண்டிலிங்’ செய்துக்கொண்டிருக்கிறாராம் அந்த மாஜி ஐ.ஜி.

 

’’டிடிவி.தினகரனை சேரவிடாமல் பார்த்துக்கொண்டதும், சசிகலா மீண்டும் எண்ட்ரி ஆகாமல் பார்த்துக்கொண்டதும் நான் தான். மேலும், இந்த முறை 90 சீட்டுகள் வந்தாலும், போதும் ஆட்சி அமைக்க சில தந்திரங்கள் இருக்கிறது. அப்படிஒரு ஆட்சியை அமைத்துக்கொடுத்துவிட்டால், என் கவர்னர் கனவு நிறைவேறிவிடும்’’ என்று ஜோதிடம் பார்க்கும் போது உடன் சென்ற நண்பரிடம் சொல்லி ஆனந்தப்பட்டாராம்.

 

‘’தேர்தல் முடிவுக்கு பிறகு நீங்கள் அப்பதவியை வாங்க வாய்ப்பு இல்லையென்றால், ஓட்டுப்பதிவு முடிந்த கையோடு, அதை செயல்படுத்தப்பாருங்க’’ என்று நண்பர் கொடுத்த யோசனையில் தீவிரமாக இறங்கி இருக்கிறாராம் மாஜி. ஐ.ஜி.

 

அதே நேரத்தில், எலியும் கிளியும் கவிழ்த்துவிட்டது என்ற கவலை இருந்தாலும், தான் செய்து வரும் பணி தன்னை கைவிடாது என்று கருதுகிறாராம் மாஜி ஐ.ஜி.

 

  • தமிழ் ஒற்றன் -

 

 

English Summary

Rtd IG will Capture Governor Post?

TamilLeader