TamilLeader

ராஜேஷ் தாஸ் கைது….? எப்போது?





 

     முதல்வரின் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பாதுக்காப்பு பணிக்கு வந்த பெண் எஸ்.பி.யிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் சிறப்பு டி.ஜி.பி.யான ராஜேஷ் தாஸ்.

     இச்சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்த நாளன்றே தமிழ் ஒற்றன் தான் முதன்முதலில் வாட்ஸ் அப் மூலம் அச்செய்தியை நாட்டு மக்களுக்கு கொண்டு போய் சேர்த்தான்.

     அந்த புகாரின் பேரில், உடனே ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். அடுத்து, புகார் கொடுக்க வந்த போது, செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே, அம்மாவட்ட எஸ்.பி. கண்ணன் அதிரடிப்படையுடன் வந்து, பெண் அதிகாரியை மிரட்டி, கார் சாவியை பறித்ததார்.

     இச்செயலுக்காக, கண்ணனையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தது தமிழ் ஒற்றன் தான்.

     பெண் அதிகாரி முதலில் டி.ஜி.பி. மற்றும் உள்துறை செயலரிடம் புகார் கொடுத்தார். இரண்டு, மூன்று நாட்கள் கழித்து அப்புகாரை திருத்தி எழுதிக்கொண்டு வந்து சி,.பி.சி.ஐ.டி.க்கும் கொடுத்தார். சி.பி.சி.ஐ.டி.க்கு கொடுத்த புகாரில் தான், ஒரு மொபைல் எண்ணை எழுதி, அந்த எண்ணிலிருந்து எனது மாமனாருக்கு மிரட்டல் விடுத்து புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று மிரட்டியதையும் குறிப்பிட்டு இருந்தார்.

      பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி குறிப்பிட்டு இருந்த அந்த மொபைல் எண் யாருடையது என்று தேடி, அந்த எண் மேற்கு மண்டல மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி. குணசேகரனுக்கு சொந்தமானது என்று முதன் முதலில் செய்தி வெளியிட்டதும் தமிழ் ஒற்றன் தான்.

      இதில், கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டார். ஆனால், முழு குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட ராஜேஷ் தாஸ் , சிறப்பு டி.ஜி.பி. பணியிலிருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவர் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை.

      இதற்கிடையில், இந்த வழக்கை தானே முன் வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்து விசாரித்தார். நீதிபதியின் தொடர் விசாரணையாலும், நீதிமன்றத்தில் அவர் வெளிப்படையாக ‘’ஏன் இன்னும் ராஜேஷ் தாசை சஸ்பெண்ட் செய்யவில்லை”” என்று கேட்டதோடு, மூன்றாவது முறையாக நடந்த விசாரணையில்,

’’இந்த நீதிமன்றத்தின் உணர்வுக்கு மதிப்பளிக்க முடியாதா?’’ என்று இரண்டாவது வழக்கு விசாரணையின் போது கேட்ட கேள்வி தான், இன்று ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் வரை இழுத்துச் சென்றது என்றால் மிகையில்லை.

       இந்த வழக்கில், வேறு யாராக இருந்தாலும் எப்.ஐ.ஆர். பதிவு செய்த நிலையில் கைது செய்யப்பட்டிருப்பார்கள். அது சாமானியனுக்கு ஒரு விதமாகவும், டி.ஜி.பி. அந்தஸ்தில் இருப்பவர்க்கு இன்னொரு விதமாகவும் இருக்கவேக் கூடாது.

       ஆகவே, சட்டம் அனைவருக்கும் சமம் என்ற நீதியை நிலைநாட்ட,  அரசாங்கமே அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இல்லையென்றால், அதற்கும் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துவிட்டால், தமிழக அரசுக்கு இன்னொரு தலைக்குனிவை ஏற்படுத்திவிடும்.

    அதுமட்டுமல்ல…. இன்னொரு நபர் தப்பித்துக்கொண்டிருக்கிறார். அவர் மேற்கு மண்டல எஸ்.பி. குணசேகரன். அவரையும் சஸ்பெண்ட் செய்துவிடுவது அரசுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தரும்.

    

     ராஜேஷ் தாஸ் கைது எப்போது…? எஸ்.பி. குணசேகரன் சஸ்பெண்ட் எப்போது…? இதைத்தான் தமிழக காவல்துறையின் அத்தனை காவலர்களும் அதிகாரிகளும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

 

  • தமிழ் ஒற்றன் -
English Summary

Rajesh Doss Arrest ... When?

TamilLeader