TamilLeader

உதயநிதிக்கும் சீட் இல்லை! ஸ்டாலின் முடிவின் பின்னணி!




 

      தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு, சேப்பாக்கம் தொகுதி என்று முடிவு செய்த நிலையில், அவருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்ற ஒரு செய்தி வதந்தியாக வந்துக்கொண்டிருக்கிறது.

 

    அந்த வதந்தி, உண்மையாக மாறினால் தி.மு.க.வுக்கு கூடுதல் நன்மையாகவே இருக்கும். ஆனால், அப்படி ஒரு வதந்தி எப்படி கிளம்பியது என்று விசாரித்தால்…. கிடைத்த தகவல் ஓரளவு உண்மையாகவே இருக்கிறது.

 

       தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது வருத்தங்களை பகிர்ந்துக்கொண்டிருக்கிறார் மூத்த தலைவர் ஒருவரிடம்.

 

     ‘’என்ன அண்ணே, இது… எல்லா மாஜி அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் தங்கள் மகனுக்கு ஒரு சீட் கொடுக்கணும்ன்னு சொல்றாங்க. இதை தடுக்கணும்னா உதயநிதிக்கு இந்த முறை சீட் கொடுக்காமல் இருப்பது தான் நினைக்கிறேன்’’ என்று சொல்லி இருக்கிறார்.

இத்தகவல் தான் அரசல் புரசலாக வெளியே வந்திருக்கிறது.

உண்மையிலேயே

தி.மு.க. தலைவர்

மு.க.ஸ்டாலின் அப்படி ஒரு துணிச்சலான முடிவை

எடுப்பாரா…?

அம்முடிவை எடுக்க அவரது மனைவி துர்கா ஸ்டாலின் விடுவாரா….?

பார்க்கத்தானே போகிறோம் ஸ்டாலினின் ஆட்டத்தை!

English Summary

No Seat for Udayanidhi

TamilLeader