TamilLeader

போலீஸ் ராஜேஷ்- கண்ணன் விவகாரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் கலகல கான்ஸ்டபிள் !




பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் அத்துமீறிய ராஜேஷ் தாஸ், அந்த பெண் அதிகாரிகரின் காரை மறித்து, கார் சாவியை பறித்த எஸ்.பி. கண்ணன் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    

      இந்த விசாரணையில் சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

    

    ராஜேஷ் தாஸ் செய்த அத்துமீறலைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி., கடந்த பிப்.22ம் தேதி அதிகாலை கிளம்பி சென்னைக்கு வந்துக்கொண்டிருந்தார்.

 

    ’’ அந்த காரை மறித்து, காரில் இருக்கும் எஸ்.பி.யை சமாதானப்படுத்து. அல்லது மிரட்டு. நான் வரும் வரை அந்த பெண் அதிகாரியை செங்கப்பட்டிலேயே நிறுத்திவை. அல்லது உன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று காபி கொடுத்து பேசிக்கொண்டிரு’’
     - இப்படி செங்கப்பட்ட எஸ்.பி. கண்ணனுக்கு உத்தரவு கொடுத்துவிட்டு, உளுந்தூர்பேட்டையிலிருந்து புறப்பட தயாராகிக் கொண்டிருந்தார் ராஜேஷ் தாஸ்.

 

      ராஜேஷ் தாஸ் இட்ட உத்தரவே, உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு என கருதிய கண்ணன் செய்த அட்ராசிடி தான், இன்று தமிழ்நாடு காவல்துறையையே அதிரச் செய்திருக்கிறது.

 

இது எல்லாம் நடந்த சம்பவம்.

இது தொடர்பாக, அரசு வாய் மூடி மவுனியாக இருக்க, 23ம் தேதியே இச்செய்தி தமிழ் ஒற்றன் மூலமாக அம்பலமானது.

 

உடனே, ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அவர் மீது விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது.

 

ஆனால், இது போதாது என்று பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி சி.பி.சி.ஐ.டியில் புகார் கொடுத்தார்.

 

கண்ணன் எந்த செக்போஸ்டில் வழி மறித்தாரோ, அந்த செக் போஸ்ட் பகுதியில் பெண் அதிகாரியிடம் ராஜேஷ் தாஸ் பேசிய அத்தனையும் ரெக்கார்டு செய்யப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல…

ராஜேஷ் தாஸ் அன்று காலை முதல் அனுப்பிய அத்தனை மெசேஜ்களும் சேகரிப்படுகிறது.

அதை எல்லாம் வைத்து ஐ.டி. சட்டம் 65- பி. பிரிவின் படி வழக்குப்பதிவு செய்ய புகார் கொடுத்தார் பெண் அதிகாரி.

 

     இந்த வழக்கில் கண்ணன் ஏ-2வாக சேர்க்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதன் பேசில் எப்.ஐ.ஆர். போடப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

இந்த விசாரணைக்கு, சம்பவத்தினத்தன்று எஸ்.பி. கண்ணனுடன் சென்ற பத்துக்கும் மேற்பட்ட போலீசாரை, நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து விசாரித்தனர்.

 

அதில் ஒரு கான்ஸ்டபிள் கொடுத்த வாக்குமூலம் தான்…

 

‘’என்னப்பா நடந்தது. செங்கல்பட்டு செக் போஸ்ட்ல…?”
 

‘’அதுவா மேடம்… நாங்க எல்லாம் எஸ்.பி.யோட போனோம். எஸ்.பி. சாரும் அந்த பெண் அதிகாரியும் தனியா நின்னு பேசிக்கிட்டு இருந்தாங்க… நாங்க ஜீப்புகுள்ளேவே இருந்திட்டோம்…. யாரும் ஜீப்பை விட்டு இறங்கவே இல்ல’’

 

’’சரி…. உங்க எஸ்.பி. கண்ணன் சொல்லிக்கொடுத்த மாதிரியே தான் இந்த வாக்குமூலம் கொடுக்கறீங்க…!”

 

‘’ஐஐயோ… இல்ல மேடம்…. இதை எங்க எஸ்.பி. சொல்லிக்கொடுக்கலை…. எஸ்.பி.யோட ஸ்பெஷல் இன்ஸ்பெக்டர் தான் சொல்லிக்கொடுத்தாரு… அதை அப்படியே சொல்லிட்டோம்”

 

-சூப்பருப்பா அந்த கான்ஸ்டபிள்…!

 

-இப்படிப்பட்ட கான்ஸ்டபிள்கள் மக்களிடம் காட்டும் அதிகாரமும் பேச்சும் அடாவடியும் நினைச்சா…. சிப்பு சிப்பா வருது.!

-தமிழ் ஒற்றன் -

English Summary

Jolly Statement by Constable

TamilLeader