TamilLeader

’வாட்ஸ் அப்பில் கருத்து போஸ்ட் செய்யக்கூடாது…?” - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை மிரட்டியது யார்?




 

உச்சபட்ச அதிகாரம் படைத்த…

புகார் என்று வந்தால் யாரையும் கேட்காமல் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற அந்தஸ்து மிக்க…

நடந்த குற்றத்தை விசாரித்து, தண்டனைக்கு ஏற்பாடு செய்யக்கூடிய…

-இது போன்ற அமைப்பு, ஒரு நாட்டில் காவல்துறைக்கு மட்டுமே உண்டு.

 

ஆனால், தமிழ்நாட்டு காவல்துறைக்கு என்னவாயிற்று?

 

தங்கள் பிரச்னைக்கே தீர்வு காணமுடியாத சோகத்தில் வெதும்பிக்கொண்டிருக்கிறது காவல்துறை.

தங்கள் பிரச்னைக்கே தீர்வு காணமுடியாதவர்களா, மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்?

என்ன நடந்தது?

சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ் தாஸ் ஐ,பி.எஸ். செய்த பாலியல் அத்துமீறல் விவகாரத்தில், பெண் போலீஸ் அதிகாரிகள் மட்டுமல்ல…. ஆண் போலீஸ் அதிகாரிகளும் கொதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

தமிழ்நாட்டு காவல்துறை ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான வாட்ஸ் அப் குழு ஒன்று உள்ளது. இதில் இரு தினங்களுக்கு முன்பாக, பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் ….. ‘’தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும். ஏன், ராஜேஷ் தாஸ் மீதும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்று போஸ்ட் செய்திருக்கிறார்.

அதற்கு, சக அதிகாரிகள் கமெண்ட் செய்தனர்.

இதை வளரவிட்டால், பெரும் பிரச்னை ஏற்படும் என்று பாதிக்கப்பட்ட ராஜேஷ் தாசும், கண்ணனும் கோட்டையில்  முதல்வரின் அலுவலகத்தில் கோலோச்சிக்கொண்டிருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரியை அணுகுகிறார்கள்.

அவர், உடனே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒப்புக்கொண்டு, ‘’வாட்ஸ் அப் குருப்பில் அரசுக்கு எதிராகவோ, அதிகாரிகளுக்கு எதிராகவோ எந்த கருத்தும் போஸ்ட் செய்யக்கூடாது’’ என்ற ரீதியில், தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினாராம்.

 

அப்படி தகவல் வந்த அதிகாரிகள், அதை அப்படியே சக அதிகாரிகளுக்கு ‘பாஸ்’ செய்ய, முதல்வர் அலுவலகத்திலிருந்தே, இப்படி ஒரு தடையா? என்ற அச்சம் கொள்ளத்தொடங்கினர்.

இன்னும் சிலர்…. இது தடை இல்லை…. இது மிரட்டல்… என்று புழுங்கினர்.

இறுதியில், 12 பெண் அதிகாரிகள் இணைந்து டி.ஜி.பி. திரிபாதியை சந்தித்து முறையிட்டனர்.

இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ?

English Summary

Dont Post your opinion at Whatsapp

TamilLeader