TamilLeader

எம்.எல்.ஏ. அண்ணனையே ஓட ஓட... அடித்து துவைத்த தம்பி தான் தி.முக. வேட்பாளர்!




 

     ‘’தம்பி வா…. தலைமையேற்க வா’’ என்று அண்ணா அழைத்தாலும்  அழைத்தார். பாவம் அந்த அண்ணன். ஆனால், அவரால் வளர்த்துவிடப்பட்ட தம்பிகளின் தொல்லை 1967-லிருந்து நின்றபாடில்லை.

 

     சென்னை திருவொற்றியூர் தி.மு.க. வேட்பாளராக களம் இறக்கப்பட்டிருப்பவர் கே.பி.பி.சங்கர். இவர் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,வான கே.பி.பி.சாமியின் சொந்த தம்பி.

 

    தொழிற்சாலைகள் நிறைந்த இத்தொகுதிக்கு, இவரா வேட்பாளர் என்று தொகுதி மக்கள் மட்டுமல்ல, தி.மு.க.வின் தொண்டர்கள் மட்டுமல்ல, தொழிற்சாலைகள் நடத்தும் தொழிலதிபர்களே விக்கித்து நிற்கிறார்கள்.

  

      காரணம், வேறு ஒன்றுமில்லை. சங்கர், அவரது அண்ணன் சாமி இருக்கும் போது கவுன்சிலர், கட்டப்பஞ்சாயத்து, கொலை வழக்கு என்று சகல வகையிலும் பிரபலம்.

 

     அ.தி.மு.க. ஆட்சி 2011-ல் வந்த போது, சாமியும் சங்கரும் கைது செய்யப்பட்டார்கள். குண்டர் வழக்கு வரை சந்திப்பு.

 

     இது கூட பரவாயில்லை. ஒரு கட்டத்தில், 2016ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் சொந்த அண்ணனான சாமியை அவரது தம்பி சங்கரும் இன்னொரு சகோதரரும் அடித்து உதைத்தனர். கொஞ்சம் தவறி இருந்தால், சாமி அன்றே இறந்தும் போயிருப்பார். சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தடுத்ததால், சாமி தப்பித்தார். கடைசியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாமி இறந்தார்.

 

     சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு ஆண்டே இருப்பதால், தேர்தல் நடக்கவில்லை. இந்த முறை திருவொற்றியூர் தொகுதிக்கு சாமியின் தம்பியான கே.பி.பி.சங்கரே தி.மு.க.வின் வேட்பாளர்.

  

      அடிதடி, கொலை, கொலை முயற்சி இன்னும் பல சொல்லவே முடியாத வழக்குகளில் சிக்கி இருப்பவரை எப்படி தி.மு.க. வேட்பாளராக்குகிறது. எல்லாம், உதயநிதியும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் தான் காரணம் என்று லோக்கல் தி.மு.க.வினர் சொன்னாலும், மு.க.ஸ்டாலின் தான் இம்முடிவை எடுத்ததாக அறிவாலய வட்டாரம் தெரிவிக்கிறது.

 

    இதுவரை தி.மு.க. எந்த ஒரு தேர்தலிலும் தி.மு.கவின் தொழிற்சங்க பிரமுகர்களை வேட்பாளராக களம் இறக்காமல் இருந்தது இல்லை. இந்த தேர்தலில், தி.மு.க.வின் முக்கிய அங்கமான தொ.மு.ச. என்று அழைக்கப்படும் தொழிற்சங்க நிர்வாகிகளில் ஒருவருக்கு கூட இடம் அளிக்கப்படவில்லை.

 

     இத்தொகுதியையாவது கொடுத்திருந்தால், திருவொற்றியூரில் வசிக்கும்  ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.

 

     தி.மு.க. சார்பில் ஒரு மீனவர் கூட நிறுத்தவில்லை. அந்த கோட்டாவில் சங்கருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்று அறிவாலயத்தில் சொன்னாலும், இது நியாயமா?

 

      இப்படிப்பட்ட வில்லங்கமான நபர் மீண்டும் வெற்றி பெற்று வந்தால்…. அத்தொகுதி என்ன கதியாகும்?

      நிச்சயம் தி.மு.க.வுக்கு பாடம் கிடைக்கும் என்று தொகுதி மக்கள் அச்சத்துடன் பேசிக்கொள்வது மு.க.ஸ்டாலின் காதில் விழுகிறதோ இல்லையோ, மே-2ம் தேதி புரிந்துக்கொள்வார்.

 

  • தமிழ் ஒற்றன் -
English Summary

DMK Candidate! What a Selection ?

TamilLeader