TamilLeader

குடும்பத்தோடு வேட்பாளர் தேர்வுக்கு பணம் செலுத்தியிருந்த தி.மு.க. தொண்டர்…? -நேர்காணலில் நடந்த சுவாரஸ்யம்




 

   சட்டமன்றப் பொதுத்தேர்தல் வந்தாலே, தமிழ்நாட்டில் இருக்கும் இரு பெரும் கட்சிகளும் களைகட்டும்.

 

    அதிலேயும் தி.மு.க.வில் ஜனநாயகமாக நடப்பது போல நேர்காணல் நடக்குமே, அது ஒரு பெரிய திருவிழா போலவே இருக்கும். காரணம், பணம் செலுத்திவிட்டால் எப்படியும் கட்சித்தலைவரையும் பொதுச் செயலாளரையும் நேரில் பார்த்து பேசிவிடலாம் என்ற நப்பாசையில் பணத்தை கட்டவும் செய்வார்கள்.

 

    அப்படி ஒரு சம்பவம் இந்த முறையும் நடந்தேறி இருக்கிறது.

 

    வேட்பாளர் நேர்காணலில் ஒருவர் வந்து அமர்ந்திருக்கிறார்.

   தான் எத்தனை வருடமாக தி.மு.க. தொண்டன் என்பதையெல்லாம் பேசத்தொடங்க…

 

‘’ஏப்பா…. எல்லாம் சரிப்பா…. நீ எவ்வளவு செலவு செய்வ…?’’ என்று பொ.செ., போட்டார் ஒரு பிரேக்.

 

    ‘’அதுக்கு இன்னும் தயாராகவில்லை. இந்த அஞ்சு வருஷத்துல நீங்க கேட்ட தொகைய சேர்த்து வைச்சி, அடுத்த முறை வரேன்’’ என்று சமாளித்தார் அந்த நபர்.

 

     ‘’காசு அடுத்த முறை சம்பாதிச்சி செலவழிக்க, இப்ப ஏம்பா, பணத்தை கட்டின?’’ என்று கேட்க…

 

    ’’எல்லாம் தலைவரோட ஒரு படம் எடுத்துக்கலாம்ன்னு தான்… நான் மட்டும் கட்டவில்லை… என் மனைவி, மகன், மருமகள் அனைவருமே வேட்பாளர் கட்டணத்தை செலுத்தி இருக்கோம்’’ என்றார் அந்த நபர்.

 

     இதை கேட்டு எல்லாரும் சிரித்தார்கள். ‘’சரிப்பா…. அவங்க எல்லாம் எங்க?’’ என்று கேட்க…

     ‘’வெளியே உட்கார்ந்திருக்காங்க’’

      ‘’சரி…. அவங்களை வரச்சொல்லு…. தலைவரோடு குடும்பமா படம் எடுத்துக்க’’ என்றார் பொ.செ.

 

      தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் சொல்கிறார் துரைமுருகன்…. ‘’தம்பி்… இது அப்பா காலத்துல நடக்கும். உன்னோட காலத்துலயும் நடக்குதுன்னா பெரிய அதிசயம்தான்’’

 

           அந்த தொண்டரும் ஒரு லட்சம் கொடுத்து ஒரு குரூப் போட்டோ எடுத்துக்கொண்டு நடையை கட்டினார்.

 

    ஒரு குரூப் போட்டோவுக்காய்யா…. ஒரு லட்சம்…?

 

 

-தமிழ் ஒற்றன்.

English Summary

DMK Candidate Selection

TamilLeader