தழிழர் பொருளாதாரம் அபிவிருத்தி பெற விவசாய மேலாண்மை கூட்டுப் பண்ணை மூலம் அதி உச்ச பயன்பெறுதல் கோழி வளர்ப்பு மூலம் குடும்ப பொருளாதாரம் பேனல். ஆடு வளர்ப்பு தொழிநுட்பங்கள். பால் பண்ணை மூலம் அதிகூடிய வருவாய் ஈட்டுதல்.

இயற்கையான முறையில் வீட்டிலே செய்யக்கூடிய மருத்துவ அழகுக் குறிப்புகள்

Monday, June 12, 2017

நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
மேலும்....

சருமம் சிவப்பு நிறத்தை பெற நெல்லிகாய் எப்படி உதவுகிறது?

Saturday, June 10, 2017

உங்கள் தினசரி வாழ்வில் அழகை மேம்படுத்த நெல்லிக்காய் நீரினை இவ்வளவு நாட்கள் பயன்படுத்தாமல் இருந்திருந்தால்…இன்று ஆர்டிக்கலின் மூலமாக படித்து, இனிமேல் உபயோகித்து பயன் பெறுவீர் என்பதில் எத்தகைய சந்தேகமும் வேண்டாம்.
நெல்லிக்காய் நீரின் பயன்பாடு பல இருக்க, அனைவராலும் அதிகம் விரும்பப்படும் ஒரு இயற்கை மூலப்பொருளாகவும் அமைந்து, உங்கள் சருமம் மற்றும் கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வினையும் இது தருகிறது.
நெல்லிக்காய் நீர் தயாரிக்கும் முறை :
மேலும், இந்த நெல்லிக்காய் நீரினை உங்கள் வீட்டிலிருந்தபடியே தயாரிப்பது மிகவும் எளிதாகவும் இருக்கிறது. நீங்கள் 3 லிருந்து 4 நெல்லிக்காய் பழத்தை நறுக்கி வைத்துகொள்ளுங்கள். அதனை ஒரு கப் தண்ணீரை கொண்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதனை ஜூஸரை கொண்டு பிரித்து விடுங்கள். கிடைக்கும் நெல்லிக்காய் தண்ணீரை சருமம் மற்றும் கூந்தலுக்கு பயன்படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.

நிறம் அதிகரிக்க :
நிறைய பெண்கள், இந்த நெல்லிக்காய் நீரினை தங்களுடைய சருமத்தின் நிறத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பயன்படுத்துகின்றனர்.
உங்கள் சருமத்தை புதுப்பிக்கும் பண்பு கொண்ட இந்த நெல்லிக்காய் நீர், உங்கள் சருமத்தை பிரகாசமானதாக வைத்துகொள்ள உதவுவதுடன் நிறத்தையும் மேம்படுத்தி சரியான முறையில் வைக்கிறது.
வாரத்திற்கு 3 அல்லது 4 முறை இதனை கொண்டு முகத்தினை கழுவ, சில வாரங்களிலே உங்கள் சருமத்தில் வித்தியாசத்தை கண்டிப்பாக காண்பீர்கள்

முதுமை பருவத்திற்கான அறிகுறிகளை தாமதப்படுத்த :
இது, நெல்லிக்காய் நீரினை பயன்படுத்துவதால் சருமத்தினை பாதுகாக்கும் மற்றுமோர் சிறந்த வழியாகும். இந்த தீர்வில், ஊட்டசத்துகளால் உங்களுடைய சருமத்தின் இழுவையானது (ELASTICITY) மேம்படுவதுடன், கோலஜன் உருவாக்கத்தையும் அதிகரிக்க இது உதவுகிறது.
அத்துடன் இது முதிர்சியடைதல் பண்பினை தாமதிக்க செய்து சுருக்கங்கள், கோடுகள் சருமத்தில் விழுதல் ஆகிய பல பிரச்சனைகளிலிருந்து உங்களை காப்பாற்றவும் உதவுகிறது.
இயற்கை கிருமி நாசினி
நெல்லிக்காய் நீரினை, காட்டன் பஞ்சில் நனைத்துகொண்டு, சருமத்தில் எரிச்சல் ஏற்படும் இடத்தில் நீங்கள் தடவி, எரிச்சலில் இருந்து விடுதலை அடையலாம்.

வெண்புள்ளிகளிலிருந்து விடுதலை அளிக்க :
நெல்லிக்காய் நீரின் மற்றுமொரு பயன்பாடாய், சருமத்தில் ஏற்படும் வெண்புள்ளிகளை நீக்குவது இருக்கிறது. இதனை உங்கள் சருமத்தில் பயன்படுத்த, அது உங்கள் சருமத்தின் துளைகளில் சேரும் அழுக்கு மற்றும் நச்சினை நீக்குகிறது. இதனை மற்றுமோர் இயற்கை மூலப்பொருளுடன் கலந்து, சருமத்தில் வாரம் தோறும் பயன்படுத்தி வரலாம்.
தோல் மறுமலர்ச்சிக்கு உதவ
சருமத்தை சரி செய்வதற்காகவும், மறுமலர்ச்சி முறைக்காகவும் இந்த நெல்லிக்காய் நீர் உதவுகிறது. உங்கள் சருமத்தில் படும் UV கதிர்களாலும், காற்றினால் ஏற்படும் மாசினாலும் என பல காரணிகளால், இந்த தோல் மறுமலர்ச்சி முறையானது பாதிக்கப்படுகிறது. அத்துடன், உங்கள் உடல் நலத்தையும் அது பாதிப்பதோடு… சருமத்தின் அழகினையும் சேர்த்து பாதிக்கிறது.
Image result for facial face
இறந்த சரும செல்களை நீக்க
இந்த பாரம்பரிய தீர்வை அளிக்கும் நெல்லிக்காயிலுள்ள பாக்டீரியாவை எதிர்க்கும் பண்பு, உங்கள் சருமத்தில் சேரும் இறந்த செல்களிலிருந்து பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.
இந்த நெல்லிக்காய் நீரினை, மற்ற இயற்கை மூலப்பொருள்களுடன் கலந்து, அந்த மாஸ்க் போல் சருமத்தில் பயன்படுத்தலாம் அல்லது சருமத்தை அதனை கொண்டு கழுவலாம். இவ்வாறு வாரம்தோறும் நீங்கள் செய்து வர, நல்லதோர் முன்னேற்றத்தை உங்கள் சருமத்தில் காணலாம்.
உங்கள் உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பினை விரட்ட:
விரும்பத்தகாத பிரச்சனைகளான பொடுகு தொல்லை, உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு ஆகியவற்றினை போக்க இது பயன்படுகிறது. ஒரு காட்டன் பஞ்சினை, நெல்லிக்காய் நீரில் நனைத்துகொள்ள வேண்டும்.
அதனை, உங்கள் உச்சந்தலையில் தேய்க்க வேண்டும். இந்த கரைசலை உங்கள் உச்சந்தலையில் அரை மணி நேரம் வைத்திருந்து, அதன் பின்னர் தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்
முடி வளர்ச்சிக்கு உதவ:
இது தான் பெரும்பாலான மக்கள், நெல்லிக்காய் நீரினை தங்களுடைய அழகினை மேம்படுத்த தினமும் உபயோகிக்க காரணமாக இருக்கிறது. முடி உதிர்தலையும் தடுக்கிறது. நெல்லிக்காய் நீரினை, உங்கள் கூந்தலை பராமரிக்க வாரம்தோறும் பயன்படுத்தி, முடி உதிர்தல் பிரச்சனைக்கு குட்பை சொல்லி விரட்டி அடியுங்கள்.
கூந்தலின் அளவினை அதிகரிக்க :
பெரும்பாலான பெண்கள் எதிர் நோக்கும் ஒரு பிரச்சனையாக இந்த மெல்லிய கூந்தல் பிரச்சனை இருக்கிறது. இந்த மாதிரி கூந்தலினை கொண்டவர்கள், கூந்தல் சேத பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். அது முடி உதிர்தலுக்கும் வழிவகை செய்துவிடுகிறது.
இந்த நெல்லிக்காய் நீரினை உங்கள் மெலிந்த முடியில் தடவ…இதில் இருக்கும் ஊட்டசத்துக்கள் உங்கள் முடியில் ஏற்படும் சிக்கலை நீக்கி, அளவினையும் அதிகரிக்க உதவுகிறது. அதனால், இந்த அம்லா நீரினை, கூந்தலில் தடவி, உங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி, எண்ணற்ற பலனை தான் பெற்று மகிழுங்களேன்.
மேலும்....

கத்தரி பயிர்களை நோய்களிலிருந்து காக்க என்ன வழி?

Friday, June 9, 2017

ஆண்டில் டிசம்பர் - ஜனவரி, மே - ஜூன் மாதங்களில்தான் கத்தரி சாகுபடிக்கு ஏற்ற பருவமாகக் கருத்தப்படுகிறது. இந்த மாதங்களில் கத்தரி சாகுபடி செய்தால் அதிக மகசூலைப் பெறலாம்.
கத்தரி சாகுபடிக்கு கோ 1, கோ 2, எம்டியு 1, பிகேஎம் 1, பிஎல்ஆர் 1, கேகேஎம் 1, அண்ணாமலை ஆகிய ரகங்கள் ஏற்றவை. ஹெக்டேருக்கு 400 கிராம் விதையே போதுமானது.
ஆனால், இந்தக் கத்தரி சாகுபடியைப் பூச்சி மற்றும் நோய்களிலிருந்து காக்க என்ன வழி என்பது பற்றி வேளாண் துறை அதிகாரிகள் கூறியது:
. "கத்தரி நடவு செய்த 15-20 நாள்களில் கத்திரிச் செடிகளின் நுனித் தண்டுகள் இலைகளுடன் காய்ந்த தலை சாய்ந்து தொங்கி காணப்படும் அவைகளைக் கிள்ளி உள்ளே பார்த்தால் தண்டு மற்றும் காய்த்துளைப்பான் எனக் கூறப்படும் வெள்ளை நிற புழு காணப்படும் . இவ்வகைப் புழுக்கள், காய்கள் பிஞ்சாக இருந்து வளர்ந்து வரும் சமயத்தில் காய்களைக் குடைந்து சாப்பிட்டு சேதப்படுத்தும். இதனைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட செடிகளின் நுனித் தண்டைக் கிள்ளி எறிந்து விட வேண்டும். பாதிக்கப்பட்ட காய்களைப் பறித்து அழித்து விட வேண்டும். கார்பரில் 50 சதத் தூளை ஓரு லிட்டருக்கு 2-4 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். காய்களைத் தாக்கும் பருவத்தில் 15 நாள்களுக்கு ஒரு முறை எண்டோசல்பான் 2 மி ó ல்லியை ஓரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

அல்லது குயினால்பாஸ் 25 இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருடன் 2 மில்லி வேப்ப எண்ணெய் ஓரு லிட்டர் தண்ணீரில் கலந்த கலவையுடன் சேர்த்துத் தெளிக்க வேண்டும். அல்லது வேப்பங்கொட்டைச் சாறு 50 மில்லியை ஓரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
சாம்பல் நிற மூக்கு வண்டு: இந்த வகைப் பூச்சிகள் இலைகளிலுள்ள சாறினை உறிஞ்சுவதால், இலைகள் சக்தியிழந்து காய்ந்துவிடும். இதைக் கட்டுப்படுத்த ஒரு ஹெக்டேருக்கு கார்போக் பியூரான் 15 கிலோவை செடி நட்ட 15 நாள்களுக்குப் பின்னர் செடிகளின் வேர்ப் பாகத்தில் போட வேண்டும்.
நூற் புழுக்கள்: . நூற் புழுத் தாக்குதலைத் தடுக்க விதைகளை ட்ரைக்கோடெர்மா விரிடி அல்லது ட்ரைகோடெர்மா ஹர்சியானம் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் பூஞ்சாண விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்
சிறப்பு சிலந்திப் பூச்சி: இதைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகத் தூளை லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது டைக்கோபால் 3 மில்லி மருந்தை 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
வெள்ளை ஈக்கள்: கோடை காலம் பயிரில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதைக் கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டும் பசை அட்டைப் பொறி ஹெக்டருக்கு 12 வீதம் வைக்க வேண்டும். வேப்ப எண்ணெய் 3 மில்லியுடன் 1 லிட்டர் தண்ணீர் கலந்து, அதனுடன் டீப்பால் என்ற ஒட்டும் திரவம் 1 மில்லியுடன் ஓரு லிட்டர் தண்ணீர் கலக்கப்பட்ட கலவையுடன் சேர்த்துத் தெளிக்க வேண்டும்.

இலைப்புள்ளி நோய்கள்: பருவமழைக் காலங்களில் வானம் மே மூட்டத்துடன் இருக்கும் சமயங்களில் இலைப்புள்ளி நோய் அதிகமாகக் காணப்படும். . இதைக் கட்டுப்படுத்த டைத்தேன் எம் 45 பூசணக் கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்
வாடல் நோய்: இந்த நோய் தாக்கப்பட்ட செடிகளின் இலைகள், காய்கள் வாடிவிடும். இதைக் கட்டுப்படுத்த விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு, ஒரு கிலோ விதைக்கு ட்ரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது கேப்டான் அல்லது திராம் 2 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு 2,5 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளித்து இந்நோய் மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம்.

சிறு இலை நோய்: இந்த நோய் தாக்கப்பட்ட செடிகள் குட்டையாகவும் இலைகள் சிறுத்தும் காணப்படும். இந்தச் செடிகள் பூக்காமல் மலடாக இருக்கும். இது, நச்சுயிரி வகை நோய். இந்த நோய் தாக்கப்பட்ட செடிகளை வேருடன் பிடுங்கி எரித்துவிட வேண்டும்.
இந்தத் தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடைப்பிடித்தால் கத்திரி சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம் 
மேலும்....

குடைமிளகாய் (கேப்சிகம் ஏனம்) சோலனேசியே

Thursday, June 8, 2017

இரகங்கள்
கே டீ பி எல் -19, பயிடாகி கட்டி
மண்
நல்ல வடிகால் வசதியுடைய மணல் கலந்த பசளை மண் அல்லது உவர்ப்புத் தன்மை இல்லாத களிமண் குடை மிளகாய் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. 6.5-7.0 வரை கார அமிலத் தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரும்.
விதைப்பு பருவம்
ஜூன் - ஜூலை.
விதையளவு
500 கிராம் / எக்டர்.
இடைவெளி
60 x 45 செ.மீ
நாற்றங்கால்
7 மீ நீளம், 1.2 மீ அகலம் மற்றும் 15 செ.மீ உயரம் கொண்ட 10-12 படுக்கைகளை தயார் செய்தல் வேண்டும். விதைகளை 10 செ.மீ வரிசை இடைவெளியில் 0.5 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். 15-20 கிலோ நன்கு மட்கிய உரம் மற்றும் 500 கிராம் 15:15:15 NPK காப்ளக்ஸ் உரத்தினை விதைத்த 15-20 நாட்களில் ஒவ்வொரு படுக்கைக்கும் அளிக்க வேண்டும்.
நடவு
ஆரோக்கியமான நாற்றுகளை 45 செ.மீ  இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
உர மேலாண்மை 
தொழுஉரம் 20-25 டன்/எக்டர், 60, 100 மற்றும் 60 கிலோ NPK/எக்டர் உரத்தினை அடியுரமாக இட வேண்டும். எக்டருக்கு 20 கிலோ தழைச் சத்து மற்றும் 20 கிலோ சாம்பல் சத்தினை நட்ட மூன்று வாரங்களுக்கு பிறகும், 40 கிலோ தழைச்சத்து மற்றும் 40 கிலோ சாம்பல் சத்தினை நட்ட ஆறு வாரங்களுக்கு பிறகும் மேலுரமாக இட வேண்டும்.
நோய்கள்
ஆந்தராக்னோஸ்

ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் மேன்கோசெப் கலந்து தெளிக்கவும்.

காய் அழுகல்  நோய்
ஒரு லிட்டர் தண்ணீரில் 2.5 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடை கலந்து தெளிக்கவும்.
சாம்பல் நோய்
0.3 சதவித நனையும் கந்தகத்தை தெளிக்கவும்.
மேலும்....

இலாபம் தரும் மண்புழு உரம்.

Tuesday, June 6, 2017

வீட்டிலேயே தயாரிக்கலாம் உரம்

வீட்டில் சேரும் எல்லாக் குப்பை-கழிவுகளையும் ஒரு பிளாஸ்டிக் பையில் இட்டு, குப்பைத் தொட்டியில் போட்டுவிடுகிறோம். அதையெல்லாம் குப்பை அள்ளும் வண்டியில் வாரிக்கொண்டு போய், ஒரு திடலில் கொட்டி வைத்துவிடுகிறார்கள். உரமாக மாற வேண்டிய மக்கக்கூடிய குப்பையும் பிளாஸ்டிக் பையில் கிடந்து அழுகி, அந்தப் பகுதியே நாற்றம் எடுப்பதுதான் மிச்சம். வீட்டில் சேரும் மக்கக்கூடிய கழிவுகளை ஏன் உரமாக்கக்கூடாது?
பலரும் வீட்டில் தோட்டம் வைத்திருப்பார்கள், தொட்டிச் செடிகளை ஆர்வமாக வளர்ப்பார்கள். தாவரங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டம் அவசியம். இதற்கான உரத்தைக் காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை.

செய்முறை

 • 7 மண் தொட்டிகளை வாங்கிக் கொள்ளுங்கள்.
 • இதில் ஒவ்வொரு கிழமைக்கும் குறிப்பிட்ட ஒரு தொட்டியில் குப்பைகளைப் போட்டு வரவும். அசைவக் கழிவுகள் அதிகம் வேண்டாம்.
 • கழிவு மிகவும் ஈரமாக நொசநொசத்து இருந்தால் கொஞ்சம் மண்ணைப் போடவும்.
 • இந்தப் பூந்தொட்டிகள் நிறைவதற்கு 3-4 மாதங்கள் ஆகும்.
 • பூந்தொட்டிகள் நிறைந்த பிறகு 20-30 நாட்கள், அப்படியே விடவும். அவ்வப்போதுக் காற்று போவதற்குக் கிளறி விடவும்.
 • இந்தத் தொட்டிகளில் காய்கறிச் செடிகள், பூச்செடிகளை உங்கள் விருப்பம் போல் இட்டு வளர்க்கலாம்.
 • அப்படிச் செடிகளை வைத்துவிட்டால், புதிய தொட்டிகளில் கிழமைக்கு ஏற்பக் குப்பைகளை இட்டு வாருங்கள்.
 • இல்லையென்றால், பழைய தொட்டிகளில் உள்ள உரத்தைத் தோட்டத்தில் இட்டுவிட்டு, மீண்டும் புதிய கழிவைப் போடத் தொடங்குங்கள்.

வீட்டுக் கழிவுகளிலிருந்து தோட்டங்களுக்கு உரம்!

 • கிராமப்புறங்கள் மட்டுமன்றி நகரங்களில் மாடியிலும், வீட்டின் பின்புறங்களிலும் தோட்டம் அமைத்து காய்கனிச் செடிகள் வளர்ப்பது அதிகரித்து வருகிறது.
 • இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?: நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள் போன்றவற்றையே சிறந்த உரமாகப் பயன்படுத்தலாம். வெங்காயம், உருளைக்கிழங்கின் தோல்கள், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக் கழிவுகள் போன்றவற்றை குப்பையில் கொட்டுகிறோம். இதை வீணாக்காமல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி, அதில் கழிவுகளைக் கொட்டி சிறிது மண்ணைத் தூவினால், உரக்குழி தயார்.
 • இதேபோல, பயன்படுத்தப்பட்ட டீத் தூள், முட்டை ஓடுகள், ஆடு, மாடுகளின் சாணம்கூட சிறந்த இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகின்றன. மாடி வீட்டில் வசிப்போர் உடைந்த மண் சட்டி அல்லது பக்கெட்டில் மண்ணை இட்டு இந்த இயற்கை உரம் தயாரிக்கலாம்.
 • இக் கழிவு நல்ல வெயில் படும்படி இருக்க வேண்டும். இப்படிச் செய்வதால் கழிவுப் பொருள்களில் உள்ள சத்துகள் அனைத்தும் ஒன்றாகி மக்கி உரமாகும். இதை தோட்டத்துச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தும்போது அவை நன்றாக வளரும். இதனால் சுவையான காய்கனிகள் கிடைக்கும்.
 • பூங்கா கழிவுகள்: மக்கும் இலைகள், பெரிய பூங்கா, தோட்டங்களில் உதிர்ந்துகிடக்கும் இலை, தழைகளை சேகரித்து வீட்டுத் தோட்டத்தில் ஒரு மூலையில் குவித்துவைக்க வேண்டும். அவற்றை மக்கச்செய்யும் முன் சிறுசிறு துகள்களாக்க வேண்டும். இவற்றிலிருக்கும் கரிமச்சத்து, தழைச்சத்து விகிதம்தான் மக்கும் முறையை நிர்ணயிக்கும் காரணிகள்.
 • எனவே, கரிமச்சத்து, தழைசத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும். அதாவது பச்சை, காய்ந்த கழிவுகளைச் சேர்த்து கலக்க வேண்டும். சமையலறை காய்கனிக் கழிவுகள், பழுப்புக் கழிவுகள்-வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புற்கள் இவ்விரண்டையும் கலந்து வைப்பதன் மூலம் குறைந்த காலத்தில் மக்கச் செய்ய முடியும்.
 • ஆக்சிஜன் அவசியம்: கம்போஸ்ட் குழிகளில் ஆக்சிஜன் அதிகமாக இருந்தால்தான் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் தூண்டப்படும். எனவே, குழியில் காற்றோட்டம் ஏற்படுத்த பூமியில் உள்ள குழியின் பக்கவாட்டிலிருந்து அல்லது செங்குத்தான நிலையில் குழாய்களைப் பொருத்தலாம். 15 நாள்களுக்கு ஒருமுறை குழியிலிருக்கும் கழிவுகளைக் கிளறுவதன் மூலம் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ளவை கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்ய உருவாகியிருக்கும் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்படுகிறது.
 • ஈரப்பதம் தேவை: கம்போஸ்ட் குழிகளில் எப்போதும் ஈரப்பதம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரப்பதம் குறைந்தால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறைந்து மக்கும் தன்மை பாதிக்கப்படும்.
 • இத் தொழில்நுட்ப முறைகளில் 30 நாள்கள் கம்போஸ்ட் குழிகளில் வைக்கப்படும் கழிவு முதிர்வடையும் நிலையை எட்டும். முதிர்வடைந்த மக்கிய உரமானது, அளவு குறைந்தும், கருப்பு நிறமாகவும், துகள்களின் அளவும் குறைந்து காணப்படும். முதிர்வடைந்த மக்கிய உரத்தைக் கலைத்து தரையில் விரித்து, மறுநாள் 4 மி.மீ. சல்லடையால் சலித்தெடுத்து வைத்துக் கொள்ளலாம்.
 • செறிவூட்டப்பட்ட உரம் அறுவடை செய்யப்பட்ட மக்கிய உரத்தை நிழலில் கடினமான தரையில் குவித்து நுண்ணுயிர்களான அசோடோபேக்டர், சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா 0.02 சதவீதம், ராக்பாஸ்பேட் 0.2 சதவீதம் ஆகியவற்றை 1 டன் மக்கிய உரத்துடன் கலந்து, 60 சதம் ஈரப்பதம் இருக்கும்படி 20 நாள்கள் வைப்பதன் மூலம் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.
 • இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரம் செறிவூட்டப்பட்ட உரமாகும். இது சாதாரண மக்கிய உரத்தைவிட ஊட்டச்சத்து அதிகமாகவும், நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர்கள் அதிகமாகவும், தாவர வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் உதவும். வீட்டிலிருக்கும் உடைந்த பிளாஸ்டிக் வாளிகளில்கூட இதுபோன்ற இலைக்கழிவுகளை இட்டு மக்கிய உரம் தயாரிக்கலாம்.
 • அதாவது இந்த பிளாஸ்டிக் வாளியானது பயிர்க்குழிபோல் பயன்படும். இந்த உரங்களை வீட்டுத் தோட்டங்களுக்கு மட்டுமல்லாது வயல்களில் பயிரிடப்படும் அனைத்து வகைப் பயிர்களுக்கும் இயற்கை உரமாக பயன்படுத்தலாம்.
மேலும்....

வளம் தரும் மண்புழு வளர்ப்பு.

மண்புழு வளர்ப்பு

ஒரு நிலம் விவசாயத்துக்கு ஏற்ற நிலம். நன்கு வளமான நிலையில் உள்ளது. அதில் என்னபயிர் செய்தாலும் நன்கு வளரும் என்று உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு நல்ல உபாயம் உள்ளது.
அது என்னவென்றால் அந்த நிலத்தில் ஈரமான ஒரு பகுதியில் மண்ணைப் பறித்துப் பார்த்தால் அங்கு மண்புழுக்கள் தென்பட வேண்டும்.
ஒரு நிலத்தில் ஈரமான ஒரு நிலையில் மண்புழுக்கள் அங்கு வாழமுடியும் என்றால் அங்கு நன்கு பயிர் செய்யமுடியும் என்பது பொருள்.
அதனால்தான் மண்புழுக்களைக் குடியானவனின் நண்பன் என்று கூறுவார்கள்.
மண்புழுக்கள் வாழும் நிலங்கள் எதனால் அப்படிக் கருதப்படுகின்றன, மண்புழுக்கள் நமக்கு என்ன பயனைத் தருகின்றன என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
மண்புழு வாழவேண்டுமானால் அங்கு அதற்குத் தீனி வேண்டும். அதற்குத் தீனி கிடைக்க வேண்டுமானால் நன்கு மக்கிய பொருட்கள் அந்த நிலத்தில் கலந்திருக்க வேண்டும். மக்கிய பொருட்கள் கலந்திருக்க வேண்டுமானால் அதற்குத் தேவையான மக்கக்கூடிய குப்பைகள் இலை தழைகள், கால்நடைகளின் கழிவுகள் போன்றவை கலந்திருக்கவேண்டும்.
அதுமட்டுமல்ல குப்பை கூழங்களை மக்கச்செய்யும் நிறைய நுண்ணுயிர்களும் அந்த நிலத்தில் வாழவேண்டும். அதற்குமேல் போதுமான ஈரம் வேண்டும்.


இவ்வளவும் சரியாக இருக்கிறது என்பதற்கு அடையாளம்தான் மண்புழு!
அந்த மண்புழுக்கள் ஒரு ஈரநிலத்தில் காணப்படவில்லை என்றால் என்ன பொருள்?
அவை வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லை, போதுமான உணவு இல்லை என்பது பொருள்.
அப்படியானால் அதைத்தொடர்ந்து அந்த நிலத்தில் மக்கக்கூடிய பொருட்களோ அவற்றை மக்கச்செய்யும் நுண்ணுயிர்களோ இல்லை என்றும் உணர்ந்து கொள்ளலாம்.
அது பயிர் செய்ய அதுவும் இயற்கை விவசாயம் செய்ய ஏற்ற நிலம் அல்ல என்று எளிதில் தெரிந்துகொள்ளலாம்.
இந்த நிலை ஏற்படுவதற்குக் காரணம் என்ன? ஏன் மண்ணில் மண்புழுக்கள் இல்லாமல் போகிறது? வரட்சிக் காலத்தில் ஈரம் இல்லாததால் மண்புழு இல்லாமல் போவது நியாயம். ஈரகாலத்திலேயே ஏன் இல்லாமல் போகின்றன?
காரணம் மிக எளிதானதுதான். ஆதாவது சின்னஞ்சிறு மண்புழுக்கள் மீது நாம் கருணையற்ற யுத்தம் நடத்தி; வருகிறோம். அதுவும் பலமுனைத் தாக்குதல்!
ஒரு பக்கம் கால்நடைப் பயன்பாட்டைக் குறைத்து அதனால் அவற்றின் கழிவுகள் நேரடியாக நிலத்தில் சேர்வதைத் தடுத்துவிட்டோம். அதனால் நிலத்தில் உள்ள நுண்ணுயிர்களுக்கோ மண்புழுக்களுக்கோ போதுமான உணவின்றிச் செய்து வருகிறோம்.
மறுபக்கம் நிலத்தில் பயிர்களுக்கான சத்துக்கள் குறைந்த நிலையில் நிலத்தை வளப் படுத்துவதற்குப் பதிலாக வேதி உரங்களைப் பயன்படுத்தினோம்.
நிலத்திலுள்ள நுண்ணுயிரிகள் வேதி உரங்களை உண்டு வாழ முடியாதது மட்டுமல்ல அந்த நிலையில் வாழும் சூழலை இழந்து அழிவை நோக்கிய பயணத்தைத் துவக்கின.
போதாக் குறைக்கு பூச்சிக் கொல்லிகளை வரைமுறையின்றிப் பயன்படுத்தியதாலும் நேரடியாக நஞ்சின்மூலமும் களைக்கொல்லிகளின் மூலமும் மண்;புழுக்கள் கொல்லப்பட்டன.
என்ன வேதி உரங்களைப் போட்டாலும் என்ன பூச்சி;க் கொல்லிகளைத் தெளித்தாலும் பயிர் எதிர்பார்த்தபடி வளர்வதில்லை போதுமான மகசூலைக் கொடுப்பதில்லை, நாளுக்கு நாள் பூமி களர் நிலங்களாகி வருகிறது என்று காலங் கடந்து உணரப் படுகிறது. இப்போதும் விவசாயம் நெருக்கடிக்கு உள்ளாகாமல் இருந்திருந்தால் வருமானம் கட்டுபடியாகக்கூடிய அளவில் இருந்திருந்தால் இப்போதும் இந்த இயற்கை வேளாண்மை பற்றிய சிந்தனை வந்திருக்காது.
இப்போது செய்த தவறு உணரப்படுகிறது. அதைத் திருத்திக் கொள்வது எப்படி என்பதுதான் கேள்வி!
அதற்கு வேதி உரங்களை மூட்டை மூட்டையாகக் கொட்டி விவசாயம் செய்தோமல்லவா அதுபோலவே நிறைய மண்புழு உரம் உற்பத்தி செய்து மூட்டை மூட்டையாகப் போட்டால் பயிர் அருமையாக வரும் என்று கருதப்படுகிறது. செய்யவும் படுகிறது.
ஆதாவது முன்போலக் கால்நடைகள் இல்லாத நிலையில், கால்நடைகiளின் பயன்பாடு குறைந்த நிலையில் கால்நடைகள் வைத்து பாரம்பரிய முறை விவசாய வேலைகள் செய்யமுடியாத நிலையில் இருக்கும் வேலை செய்யும் மாடுகளையும் பால்மாடுகளையும் அவற்றின் கழிவுகளையும் எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்தித்ததன் பயன்தான் மண்புழு உரம். ஏன் அதை நாமே உற்பத்தி செய்து நிலத்துக்கு இடக்கூடாது என்றும் நினைத்தார்கள்.
மாடுகளை நிறைய வளர்த்து அவற்றை நிலத்தில் பட்டிகளில் அடைத்து மற்றும் எருக் குழிகளில் சேகரிக்கப்படும் சாணத்தின் மூலம் நிலத்தில் மண்புழுக்கள் உற்பத்தியாவதன் மூலம் பயன் கிடைக்க நிறைய மாடுகள் வேண்டும். நிறைய வேலையாட்கள் வேண்டும். நிறைய செலவும் பிடிக்கும். அது நடைமுறை சாத்தியமும் இல்லை.
அதனால் மண்புழு உரத்தை நாமே ஓரிடத்தில் உற்பத்தி செய்வது சுலபம்தானே! அதுதான் மண்புழு மோகம்!
நாம் உற்பத்தி செய்யும் மண்புழு உரமும் நிலத்தில் வாழும் மண்புழுக்கள் உற்பத்தி செய்யும் உரமும் ஒரேமாதிரி தரமுடையவைதானா?
மண்புழுக்களுக்கு நிலத்தில் உரமிடுவது மட்டும்தான் வேலையா?
இந்த இரு கேள்விகளுக்கும் தெளிவான விடை காணவேண்டும்.
மண்புழுக்கள் தங்களுக்கான உணவைத்தேடி இடைவிடாமல் தாம் வாழும் காலம் ஈர மண்ணுக்குள் இடம் பெயர்ந்துகொண்டே உள்ளன. குறைந்த பட்சம் இரண்டடி ஆழத்துக்காவது மண்ணுக்குள் மண்புழுக்களின் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும்.
மண்ணுக்குள் மண்புழுக்களின் நடமாட்டம் தொடர்ந்து இருப்பதால் விவசாய நிலத்தின் மேல் மண் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்படுகிறது. அந்தத் துளைகள் உடனுக்குடன் மூடிக்கொள்வதால் நமது கண்களுக்குத் தெரியாது ஆனால் அப்படித் துளையிடப்படுவதால் மண் கெட்டிப்படாமல் மிருதுவாக ஆக்கப்படுகிறது.
அப்படி மிருதுவாக்கப்படும் மண் மற்ற நுண்ணுயிர்களின் நடமாட்டத்துக்கும் மழைநீர் எளிதில் மண்ணுக்குள் நுழைந்து தங்கவும் உதவி செய்கிறது.
ஆக மண்ணை மிருதுவாக்குகிறது. அதன் மூலம் மற்ற நுண்ணுயிர்களின் நடமாட்டத்துக்கும் பெருக்கத்துக்கும் உதவி செய்கிறது. மழைநீர் சேகரிப்புக்கும் உதவுகிறது.
மண்புழுக்களை நாம் வளர்ப்பதன் மூலம் எரு உற்பத்தி செய்தாலும் மண்புழுக்களின் இந்த வேலைகளையெல்லாம் நிலத்தில் செய்வது யாh?
அதுமட்டுமல்ல இரண்டாவதாக மண்புழுக்கள் தான் வாழும் மண்ணில் நிலத்திலேயே தனக்கான உணவையும் பெற்று தனது கழிவுகளையும் வெளியேற்றும்போது அந்தக்கழிவுகள் எருவாக உடனுக்குடன் மண்ணில் சேர்ந்து விடுகிறது. அப்படிச் சேர்க்கும்போது அதை தான் நடமாடும் இடங்களில் வெளிக் காற்றுப் படாமல் வெய்யில் படாமல் சேதாரமில்லாமல் சேர்க்கிறது.
அந்த எருவை நிலத்தில் உள்ள அதைச் சார்ந்துள்ள சில நுண்ணுயிரிகள் மேலும் பக்குவப்படுத்தி மேம்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. பல்லுயி;ர்களின் வாழ்க்கை முறை அதுதான் ஆகும்.
ஆனால் தனியாகத் தயாரிக்கப்படும் மண்புழு உரம் உடனுக்குடன் உடனுக்குடன் நிலத்தில் சேர்க்கப்படுதில்லை. அதனால் காற்றின் மூலமும் வெப்பத்தின் மூலமும் ஒரு பகுதி சத்துக்களை இழந்து சக்கையாகிப் போகும் வாய்ப்புகள் நிறைய உள்ளன.
மண்புழு இயற்கையாக நிலத்தில் எங்கெல்லாம் தனது கழிவாகிய உரத்தை படியச் செய்கிறதோ அந்த முறையில் நாம் தயாரிக்கும் உரத்தைப் படியச்செய்ய முடியாது.
இந்த நிலையில் நாம் தயாரிக்கும் மண்பூழு உரமும் அதன் பயன்பாடுகளும் இயற்கையில் வாழும் மண்புழுக்களுக்கு எப்படி ஈடாகும்?
அதனால் நாம் மண்புழுக்களுக்கு உணவாகும் விதத்தில் மக்கக்கூடிய குணம் உள்ள பல்வேறுபட்ட பொருட்களை விவசாய நிலங்களில் இட்டு மக்கச்செய்ய வேண்டும். கால்நடைக் கழிவுகளை அது காற்றாலும் வெய்யிலாலும் சாரமிழக்கும் முன்பே நிலத்தில் சேர்க்கவேண்டும்.
எவையெல்லாம் கொண்டு மண்புழு வளர்க்கலாம் என்று நினைக்கிறோமோ அவற்றை யெல்லாம் விவசாய மண்ணிலேயே நேரடியாகச் சேர்த்து மண்புழுக்களுக்கு உணவாக மாற்றும் வேலையை இயற்கையிடமே ஒப்படைக்கவும் வேண்டும். அதுதான் சிறந்த முறை ஆகும்.
அதைவிட்டு இயற்கையாக மண்ணில் வாழ்ந்து வளம் கொடுக்க வேண்டிய மண்புழுக்களை கோழிப் பண்ணைகளில் கோழிகள் வளர்ப்பதுபோல் வளர்க்க நினைத்தால் அந்த முறையில் மண்புழுவளர்த்து நல்ல லாபத்துக்கு மண்புழு உரம் விற்பவர்கள் வாழத்தான் பயன்படுமே தவிர நிலங்கள் வளங்குறைந்து போவதைத் தடுக்க உதவாது.

வேதி உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் கொட்டிக்கொடுத்துக் கடன்காரர்கள் ஆன விவசாயிகள் வருங்காலத்தில் மண்புழு உரத்துக்கும் பஞ்சகாவ்யத்துக்கும் செலவு செய்து கட்டுபடி ஆகவில்லை என்று சொல்லவேண்டிய நிலையும் வரலாம்.
விவசாயிகள் தற்காலத்தில் தங்கள் நிலத்தில் விளையும் நெல்லை விற்றுவிட்டு கடைகளில் விற்கும் அரிசியைத்தான் வாங்கி உண்கிறார்கள்.

அதுபோல தங்களின் கால்நடைகளின் சாணத்தை மண்புழு வளர்ப்பாளர்களுக்கு விலைக்கு விற்றுவிட்டு அவர்களிடமிருந்து மண்புழு உரத்தையும் பஞ்சகாவ்யத்தையும் வாங்கி உபயோகிக்கும் காலமும் வெகு தூரத்தில் இல்லை.
மேலும்....

மனதிற்கு இதம் தரும் வாத்து வளர்ப்பு

மனதிற்கு இதம் தரும் வாத்து வளர்ப்பு

பல்வேறு வீடுகளில் அழகுக்காகவும் வாத்துக்களை வளர்க்கின்றனர். குறைந்த அளவு தீவனம் இருந்தால் கூட வாத்து வளர்க்க இயலும். நீரில் நீந்தும் வாத்துக்களை பார்க்கும் போதே மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். பிற பறவையினங்களைப் போல வாத்துகளை தாக்கும் நோய்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வாத்து வளர்க்க தேவையான தொடர்செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகள் கோழியினங்களை ஒப்பிடும் போது மிகவும் குறைவு. முறையாக வாத்து வளர்ப்பை அறிந்து, அதை கடைபிடிப்பது அவசியம்
.

 1. வளர்ப்பும் பராமரிப்பும் இந்த கூஸ் வகை வாத்துக்கள் இறைச்சிக்காவும், அழகுக்காகவும் வளர்க்கப்பட்டு வருகின்றன. மேலும் இவை காவல்காப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கோழியை போல பண்ணை வீடோ, அதிக பராமரிப்பு செலவோ தேவையில்லை. கூஸ் வாத்தும், வாத்துக்களை போன்றே நீர் நிலைகளிலும், அறுவடை செய்த விளைநிலங்களில் உள்ள தானியங்களையும் உண்டு வாழக்கூடியது.4 முதல் 20 கூஸ் வாத்துக்களை வீட்டின் புறக்கடையில் வளர்க்கலாம். அவ்வாறு வளர்க்கும் பொழுது சமையல் கழிவுகளை தீவனமாக பயன்படுத்தலாம். ஜோடி வாத்துக்கள் வாத்துக்களை ஜோடியாக பார்த்து வாங்கவேண்டும். அப்பொழுதுதான் அவை உற்சாகமாக நம் வீட்டில் வந்து வளரும். சுத்தமான தண்ணீர் அவசியம் அப்பொழுதுதான் நோய் தாக்குதல் ஏற்படாது. அவ்வப்போது தண்ணீரை சோதனை செய்து வெளியேற்றிவிட்டு சுத்தமான தண்ணீரை நிரப்பவேண்டும். தண்ணீர் தொட்டியில் சில நேரம் அவை உணவுகளை தேடினாலும், புல் தரையில் இறங்கியும் அவை மேய்கின்றன. எனவே வாத்துக்களுக்கு தேவையான வைட்டமின், தாதுப்பொருட்கள் நிறைந்த உணவினை அளிக்கவேண்டும். இளைப்பாற நிழல் வாத்துக்கள் எப்பொழுதுமே தண்ணீரில் இருப்பதில்லை. எனவே தண்ணீரின் அருகில் நிழல் தரும் மரங்கள், புல்வெளிகளில் சிறு குடில்போல அமைத்து அவை இளைப்பாற வசதி ஏற்படுத்தலாம். நோய் தாக்குதல் வாத்து காலரா, வாத்து பிளேக் போன்ற நோய்கள் வாத்துக்களை தாக்குகின்றன. இந்த நோய்களிலிருந்து வாத்துகளை பாதுகாப்பதற்கு தடுப்பூசி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். வாத்து காலராவிற்கு 3 முதல் 4 வாரத்திற்கும், வாத்து பிளேக்கிற்கு 8 முதல் 12 வாரத்திற்குள்ளும் தடுப்பூசி போடப்பட வேண்டும். நாய், பூனைகள் போன்றவைகளிடம் இருந்தும் வாத்துக்களை பாதுகாக்கவேண்டும். 

மேலும்....

வளம் தரும் வாத்து

வளம் தரும் வாத்து


வாத்து

வாத்து வளர்ப்பில் கிராமப்புற விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மொத்த கோழியினங்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் வாத்துகள் உள்ளன. மொத்த முட்டை உற்பத்தியில் 6 முதல் 7 சதவீதம் வரை வாத்துகள் பங்களிக்கின்றன. தற்பொழுது பரவலாக நாட்டு வகை வாத்துகள் வளர்க்கப்படுகின்றன. இவை ஆண்டுக்கு 100 முதல் 150 முட்டைகள் வரை மட்டுமே உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. அறுவடை நிலங்களில் மேய்த்து வளர்ப்பதால், போதுமான தீவனம் கிடைக்காததும் குறைந்த முட்டை உற்பத்திக்கு காரணம். இது தவிர சில சமயங்களில் வாத்துகளைத் தாக்கக்கூடிய நோய்களுக்கு தடுப்பூசி போடவில்லை என்றாலும் முட்டை உற்பத்தி குறைவதோடு, வாத்துகள் இறப்பும் நேரிடும். ஆகவே, இத்தகைய சூழலில் முறையாக வாத்து வளர்ப்பை அறிந்து, அதை கடைபிடிப்பது அவசியம்.

வாத்து வளர்ப்பின் நன்மைகள்

 • கோழி முட்டை எடையுடன் ஒப்பிடும்போது வாத்து முட்டை 1520 கிராம் கூடுதல் எடை உடையது.
 • மூன்று ஆண்டுகள் வரை முட்டையிடக்கூடுயது.
 • குறைந்த அளவு தீவனம் இருந்தால் கூட வாத்து வளர்க்க இயலும்.
 • வாத்துகளை தாக்கும் நோய்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
 • வாத்து வளர்க்க தேவையான தொடர்செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகள் கோழியினங்களை ஒப்பிடும் போது மிகவும் குறைவு.

தீவன பராமரிப்பு

இறைச்சி வாத்துகளுக்கு
இவ்வகை வாத்துகள் 7 வாரத்தில் குறைந்தபட்சம் 2.2 முதல் 2.5 கிலோ வரை வளரக்கூடியது. அப்போது அதனுடைய தீவன மாற்றுத்திறன் 3.25 ஆகும்.

முட்டை வாத்துகளுக்கு

முதல் 20 வாரத்திற்கு வாத்துகளுக்கு 12.5 கிலோ தீவனம் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு 120 முதல் 170 கிராம் தீவனம் என்ற கணக்கில் ஒராண்டிற்கு தோராயமாக 60 கிலோ வரை தீவனம் தேவைப்படும்.

மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் வாத்துகளுக்கு
அறுவடை செய்த நிலங்களில் உள்ள உதிரி தானியங்கள் புழு, பூச்சிகள், நத்தைகளை உண்டு வாழ்கின்றன.

இவ்வகையான தீவனம் அதிக முட்டையிடுவதற்கு போதுமானது அல்ல.

ஆகவே மேய்ச்சலில் விடுவதற்கு முன்பாகவும் மேய்ச்சலில் இருந்து வந்த பின்பும் கூடுதலாக நெல் போன்ற தானியங்களையோ அல்லது வாத்துகளுக்கென்றே தயாரிக்கப்பட்ட தீவனங்களையோ நாம் கொடுக்கலாம்.

ஒரு சில விவசாயிகள் குச்சி தீவனங்களை பயன்படுத்துகின்றனர். இந்த வகையான தீவனங்கள் ஒரு நாளைக்கு 50 கிராம் முதல் அதிகமாக 100 கிராம் வரை கொடுக்கலாம்.

அப்படி கொடுக்கப்படும்பொழுது தொடர்ச்சியாக முட்டையிடுவதற்கு போதிய ஊட்டச்சத்துகள் தீவனத்திலிருந்து கிடைக்கப்பெறுகின்றன.

குடற்புழு நீக்கம்

அதிக முட்டை இடுவதற்கு குடற்புழு நீக்கம் மிக முதன்மையானது. வாத்துகளை தட்டைப்புழு, உருண்டைப்புழு, நாடாப்புழு தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் முட்டை உற்பத்தி திறன் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆகவே, 2 முதல் 3 மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் அவசியம்.

வாத்துகளை தாக்கும் நோய்கள்

 • வாத்து காலரா
 • வாத்து பிளேக்
இத்தகைய நோய்கள் அதிக நட்டத்தை ஏற்படுத்துகின்றன. இந்த நோய்களிலிருந்து வாத்துகளை பாதுகாப்பதற்கு தடுப்பூசி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். வாத்து காலராவிற்கு 3 முதல் 4 வாரத்திற்கும், வாத்து பிளேக்கிற்கு 8 முதல் 12 வாரத்திற்குள்ளும் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

ஆகவே, முட்டை உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு உயர்தர இனங்களான காக்கி கேம்பல் மற்றும் இண்டியன் ரன்னர் வாத்துகளை வளர்த்து அவற்றிற்கு மேய்ச்சல் நிலங்களில் உள்ள தானியங்களை தவிர கூடுதலாக தானியங்களையோ அல்லது தீவனங்களையோ கொடுத்து பராமரித்தோமானால் அதிக முட்டை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

கூஸ் வாத்து அடிப்படை தகவல்கள்

கூஸ் வாத்து என்பது வாத்து வகையை சார்ந்தது. கூஸ் வாத்து ஒரு சில இடங்களில் மடை வாத்து என்றும் பங்களா வாத்து என்றும் அழைக்கப்படுகின்றன.
கூஸ் வாத்துக்கள் வேகமாகவும், மேய்ச்சலில் உள்ள புல் அதிகமாகவும், நோய் எதிர்ப்புத் தன்மை அதிகம் கொண்டவையாகவும் உள்ளது.
இவற்றை பராமரிப்பதற்கு குறைந்த அளவு இடவசதி இருந்தாலே போதுமானது ஆகும்.
கோழியை போல பண்ணை வீடோ, அதிக பராமரிப்பு செலவோ தேவையில்லை.
இந்த கூஸ் வகை வாத்துக்கள் இறைச்சிக்காவும், அழகுக்காகவும் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இது தவிர அவற்றின் இறகானது தலையனை மற்றும் இறகுப் பந்து தயாரிக்க உதவுகின்றன.
மேலும் இவை காவல்காப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கூஸ் வாத்தும், வாத்துக்களை போன்றே நீர் நிலைகளிலும், அறுவடை செய்த விளைநிலங்களில் உள்ள தானியங்களையும் உண்டு வாழக்கூடியது.
4 முதல் 20 கூஸ் வாத்துக்களை வீட்டின் புறக்கடையில் வளர்க்கலாம்.

அவ்வாறு வளர்க்கும் பொழுது சமையல் கழிவுகளை தீவனமாக பயன்படுத்தலாம்.

கூஸ் வகைகள்


 • சைனீஸ்
 • எம்டன்
 • ஆப்ரிக்கன்
 • ரஸ்யன்
 • டொலூஸ்
இந்த வகையான கூஸ் இனங்கள் அதிக வருமானத்தை தரக்கூடியது. முற்றிலும் வளர்ச்சியடைந்த கூஸ்வாத்து 5 முதல் 6 கிலோ கிராம் வரை வளரக்கூடியது.
இவை ஆண்டிற்கு 50 முதல் 100 முட்டைகள் வரை இடக்கூடியது. ஒரு முட்டையின் எடை 100 முதல் 120 கிராம் வரை இருக்கும்.

பிராய்லர் வகை கூஸ்வாத்து 8 முதல் 9 வாரங்களில் 5 முதல் 6 கிலோகிராம் வரையிலும் வளரக்கூடியது.
இவ்வகை கூஸ் இனங்கள் 1 கிலோ கிராம் எடை பெறுவதற்கு 4 கிலோகிராம் தீவனம் தேவைப்படுகிறது.
இளம் கூஸ் வாத்து குஞ்சுகளுக்கு 2 முதல் 3 வாரம் வரை கோழி தீவனத்தை அளிக்கலாம்.
இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் பொழுது 5 பெண் வாத்திற்கு 1 ஆண் வாத்து வீதம் வளர்க்கப்பட வேண்டும்.
கூஸ் முட்டையின் அடைகாலம் 29 முதல் 34 நாட்கள் ஆகும்.

டிசம்பர் மாதம் முதல் முட்டையிட தயாராகிறது. அப்பருவத்தில் மேய்ச்சல் தீவனம் மட்டுமல்லாமல் கூடுதலாக தானியமோ (அ) தீவனமோ கொடுத்தோமானால் அதிக முட்டை பெறுவதற்கு வாய்ப்புள்ளது.
புறக்கடையில் மட்டுமின்றி கூஸ் வாத்து வளர்ப்பதை பெரியதொழிலாக நடைமுறைப் படுத்தினால் இறைச்சி மற்றும் இறகிலிருந்து அதிக வருவாய் பெற வாய்ப்பு உள்ளது

மேலும்....

புதியவை

ஆடு வளர்ப்பு

மாடு வளர்ப்பு

எருமை வளர்ப்பு

வாசனைப் பயிர்கள்

காளான் அறுவடை

மண்புழு உற்பத்தி

சேதனம்

ஒருங்கிணைந்த பண்ணை

மகளீர் பக்கம்